சொதப்பும் விமர்சனம்..கூலி முதல் நாள் வசூல் இத்தனை கோடியை அள்ளியதா?
கூலி முதல் நாள் வசூல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று உலகளவில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் படம் தான் கூலி.
படம் ஏற்கனவே ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கூலி படத்தின் கதை வழக்கமான லோகேஷ் கனகராஜின் கடத்தல் சம்பந்தமான ஜானரிலும், பழி வாங்கும் படலத்திலும் தான் நகர்கிறது.
முக்கியமாக படத்தின் ஸ்க்ரீன்ப்ளே ரொமபவும் சொதப்பியதாலும் கிளைமேக்ஸ் காட்சியெல்லாம் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்று பலர் கூறி வருகிறார்கள்.
இருப்பினும் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் முதல் நாள் வசூல் நன்றாகவே கூலி படத்தினை காப்பாற்றியிருக்கிறது.
50 கோடி ரூபாயா
இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை அளிக்கும் Sacnilk சமூகவலைத்தளத்தின் பதிவின் படி கூலி படம் முதல் நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி இதுவரை இந்தியாவில் மட்டும் மொத்தம் 28.33 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்றைய நாள் முடிவில் இந்த தொகை 50 கோடி ரூபாயாக உயர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் உலகளவில் முதல் நாள் வசூல் ரூ. 100 கோடியை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது.