ரஜினிக்கு பின் சன் பிச்சர்ஸ் விஜய்க்கு வைத்த ஆப்பு! நீயே வந்து மாட்டிக்கிட்டியே பங்கு..

vijay superstar rajinikanth sunpictures beast thalapathy66
By Edward Apr 16, 2022 03:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் படத்தினை வெளியிட்டு சன் பிச்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தினையும் தயாரித்தது. இதற்கு பின் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தினை தயாரித்து வெளியிட்டது.

இந்நிலையில் பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் அடுத்த நாளே கேஜிஎஃப் 2 படம் வெளியானதால் பீஸ்ட் படத்தின் திரையரங்குகள் குறைந்து போனது. இதனால் பல கோடியில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது.

முதல் நாள் வசூல் இதுவரை இருந்த சாதனையை 40 கோடி எடுத்து முறியடித்திருந்தாலும், போதிய வருமானம் பீஸ்ட் படத்தால் சன் பிச்சர்ஸ் பார்க்க முடியாது. பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களை கூட திருப்திப்படுத்தாததால் விஜய்யை வைத்து சன் பிச்சர்ஸ் புதிய ரூட்டை கடைப்பிடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்வியால் பாதி சம்பளத்திற்கு அடுத்த நெல்சன் படத்திற்கு சன் பிச்சர்ஸ் நிறுவனத்தோடு எப்படி ஒப்பந்தமானாரோ, அதேபோல் விஜய்யை வைத்து மற்றொரு படத்தினை தயாரிக்கவுள்ளார்களாம்.

நஷ்டத்தை எப்படி சூப்பர்ஸ்டார் சரி செய்தாரோ, விஜய்யும் பாதி சம்பளத்திற்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனராம். இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் வாய்ப்பு கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.