ஆணவத்தில் ஆடிய தளபதி ரசிகர்கள்!! தியேட்டரில் விஜய் ரசிகரை குமுறிய ரஜினி ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விஜய் - அஜித் என்று இருந்த சோசியல் மீடியா சண்டை ரஜினி - விஜய்யாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் தான்.
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினிகாந்த் சார்ப்பில் ஒரே சூப்பர் ஸ்டார் அது தலைவர் தான் என்றும் வாக்குவாத சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்பின் ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ லான்சில் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியது விஜய் ரசிகர்களை கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயிலர் படம் இன்று வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.
சென்னை வெற்றி திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது விஜய் ரசிகர் ஒருவர் ரஜினி ஒழிக என்று கத்தியதை அறிந்த ரஜினி ரசிகர்கள், அந்த விஜய் ரசிகரை தியேட்டர் வெளியில் வைத்து அடித்து குமுறியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.