ஆஃப் பாட்டில் பீர் அடிச்சு இவர் போட்ட ஆட்டம் இருக்கே!! இசைஞானி குறித்து ரஜினிகாந்த் காமெடி ஸ்பீச்..
இசைஞானி பாராட்டு விழா
தென்னிந்திய சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், இசை உலக சரித்திரத்திலேயே இசைக்கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம். சிம்பொனி இசையமைக்க செல்வதற்கு முதல்நாளே எனக்கு நேரில் வந்து வாழ்த்தியவர் முதல்வர் மு க ஸ்டாலின்.
சிம்பொனி இசையமைத்து திரும்பும்போது எனக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. இன்று பாராட்டு விழாவும் நடத்துகிறார்கள் என்று பேசினார். இதனையடுத்து ரஜினிகாந்த் பற்றி இசைஞானி பேசும்போது, ஜானி படத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை காமெடியாக பேசியுள்ளது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஆஃப் பாட்டில் பீர்
அதில், ரஜினிகாந்த் இரண்டு நாள் முன்பு போன் செய்து, நம்ம பண்ணியதை எல்லாம் விழாவில் சொல்லப்போறேன் என்று சொன்னார். நம்ம பண்ணதெல்லாம், நீங்கள்(ரஜினி) எப்படி மாறீனீங்க, தொப்புள்-க்கு மேல பெல்ட் போட்டுட்டு, நல்ல கிராப் வெச்சுட்டு, கைல பட்டையா வாட்ச் போட்டுட்டு, மகேந்திரன் நானும் நீங்களும் குடிச்சோம்.
நீங்க அரைபாட்டில் பீர் குடிச்சு ஆடுன ஆட்டம் பாருங்கன்னு சொன்னதும் நீங்க என்னவேனா சொல்லுங்க என்று ரஜினி என்னிடம் கூறினார். உடனே ரஜினிகாந்த் எந்திரித்து மேடைக்கு வந்து, விஜிபியில் ஜானி படத்தின் சூட்டிங் சமயத்தில், இவரும் மகேந்திர சாரும் வந்தாங்க, எல்லாம் முடிச்சிட்டு நானும் மகேந்திரன் சாரும் ட்ரிங்க்ஸ் எடுத்தோம்.
இவங்ககிட்ட சாமி சரக்குன்னு சொன்னோம்..பின் ஆஃப் பாட்டில் பீர் அடிச்சுட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே, ஐய்யய்யோ 3 மணி நைட்டு வரைக்கும், ஊர்ல இருக்க இருக்குற கிசுகிசு எல்லாம் கேட்டாரு, அதான் இந்த பாட்டெல்லாம் என்று சிரித்தப்படி பேசியுள்ளார் ரஜினிகாந்த்.