நடிகைகளை ஆட்டிப்படைத்த ரஜினி கமலையே புரட்டி எடுத்த நடிகை.. இவர் தான் வேணும்ன்னு புலம்பிய இயக்குனர்..
பாலிவுட் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ரதி அக்னிகோத்ரி. ஸ்ரீதேவிக்கு அடுத்து பலரால் ஈர்க்கப்பட்டு வந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். தமிழில் பாலிவுட் நடிகைகளுடன் ஆரம்பத்தில் ரஜினி, கமல் நடித்து ஹிட் கொடுத்து வந்தனர்.
அப்படி இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் ரதி அக்னிகோத்ரியும் தான். பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் சினிமாவில் தோற்றுப்போகமாட்டார்கள் என்று கூறுவார்கள். அப்படி ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ராதா, ரஞ்சனி, ராஜ்யஸ்ரீ போன்ற R நடிகைகளின் வரிசையில் இணைந்தவர் தான் ரதி.
பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். 1979ல் சுமார் 5 படங்களில் தமிழில் நடித்தார் ரதி. சுத்தமாக தமிழ் பேசத்தெரியாத நடிகையான ரதியுடன் கமல், ரஜினி நடிக்க கஷ்டப்பட்டார்களாம்.
ரஜினியுட்ன் மூன்று படங்கள், கமலுடன் ஏக் துஜே கேலியே என்ற பாலிவுட் படம் என்று சூப்பர் டூப்பட் படமாக அமைந்ததற்கு ரதி அக்னிகோத்ரியும் முக்கிய காரணம். நடிகர் பிரசாந்தின் மஞ்னு படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்தது தான் அவர் நடித்த கடைசி தமிழ் படம். இதன்பின் அப்பா மரணத்தால் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
