விலையுயர்ந்த வைர நெக்லஸ்!! மீண்டும் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் அம்பானி மகள் இஷா அம்பானி..
இஷா அம்பானி
இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.
ஃபேஷனின் ஆஸ்கர் விருதுகள் என அழைக்கப்படும் மெட் காலா 2025 நிகழ்ச்சி சிலநாட்களுக்கு முன் நடந்தபோது கிளாமர் ஆடையணிந்து இஷா அம்பானி கலந்து கொண்டுள்ளார். அதைவிட அவர் அணிந்த நெக்லஸை பார்த்து அனைவரும் வியந்தனர்.
வைர நெக்லஸ்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த அம்பானியின் கலாச்சார நிகழ்ச்சியில் சிகப்புநிற ஆடையணிந்து வியக்க வைக்கும் விலைமதிப்பில்லாத நெக்லஸ் அணிந்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் இஷா அம்பானி. இஷா அம்பானி வந்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வியக்க வைத்துள்ளது.