புகழ் போதையால் நடிக்க மறுத்த மூத்த நடிகர்கள்! தூக்கிவிட்டவருக்கே இப்படியா? REWIND
தமிழ் சினிமாவில் மேடை நாடகத்துறையில் நுழைந்து பிரபல இயக்குனராக ஜொலித்து தான் அறிமுகப்படுத்தாத நடிகர்களே கிடையாது என்ற பெயரை எடுத்தவர் கே பாலச்சந்தர். நீர்க்குமிழி படத்தில் ஆரம்பித்து பல கலைஞர்களை உயர்த்திவிட்டவர் பாலச்சந்தர்.
தன் எதார்த்தமான கதையை கொண்டு சமுக பிரச்சனைகளை மையப்படுத்தி ஹிட் கொடுத்து வந்தார். ரஜினி, கமல் உள்ளிட்ட பல இந்த நிலைக்கு வர அவர் கொடுத்த வாய்ப்பும் நடிப்பும் தான் காரணம். அப்படியொரு லிஜெண்ட் இயக்குனர் 2014ல் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
ஒரு மேடையில் ரஜினியிடம் என் படத்தில் நீ நடிப்பியா இப்போது என்று கேட்க அதற்கு சரி என்று கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார். நேரில் ஒன்று பேசி வெளியில் வேண்டாம் என ஒதுக்கி இருந்தாராம் சூப்பர்ஸ்டார். என்ன வளர்த்துவிட்டவருக்கு இப்படியொரு ஆசை இருக்கத்தான் செய்யும். ரஜினி கமல் அவர் உயிரோடு இருக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் இருவரையும் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு இது சரிப்பட்டு வராது என்று மழுப்பியுள்ளார்கள் கமல் ரஜினி.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வளர்ந்த ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களுக்கென ஒரு இமேஜ் உள்ளது என்ற காரணம் தானாம். உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நிலையில், அவர் தயாரிப்பில் நடிக்க தயாராக இருந்தவர்கள் இயக்கத்தில் நடிக்க மறுத்துள்ளனர். கதைக்காக இல்லாமல் அவருக்காக இருவரும் நடித்து கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி ரசிகர்களுக்கு அப்போதே இருந்து வந்தது.