விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கும் தலையில் துண்டை போட்டாரா நெல்சன்.. ஜெயிலர் Short Review..

Rajinikanth Beast Nelson Dilipkumar Jailer Tamil Movie Review
By Edward Aug 10, 2023 10:12 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து நெல்சன் சொதப்பிடுவார் என்றும் பலர் எதிர்ப்பார்த்த நிலையில் அதை காப்பாற்றியிருக்கிறார் நெல்சன். பீஸ்ட் படம் சொதப்பினால் படத்தின் வசூல் நல்ல வரவேற்பை பெற்றதாக இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை கையில் எடுத்து தூக்கி வைத்திருக்கிறார் நெல்சன்.

ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி மகன், மனைவி, மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார். நேர்மையான மகன் சிலை கடத்தல் விசயத்தில் கொல்லப்பட்டதை அறிந்து மகனின் இறப்புக்கு பழிவாங்க வில்லன் கூட்டத்தை ஒழிப்பது தான் கதையாக அமைந்துள்ளது. தன்னுடைய ஸ்டைலில் நெல்சன் சிறப்பான டார்க் காமெடி ஆக்சனில் காட்டியிருக்கிறார்.

தலைவரின் அலைபறையாக சிறந்த இடைவேளை காட்சி, கிளைமேக்ஸ், ஆக்சன் என்று பின்னி பெடலெடுத்திருக்கிறார் நெல்சன். முக்கிய கதாபாத்திரங்களான, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு காட்சிகளும் பின்னணி இசையும் மிகப்பெரிய பிளஸ்-ஆக அமைந்திருக்கிறது.

அனிருத் இசையில் காவாலா, தலைவர் அலைப்பறை ரசிகர்களை உட்கார வைக்கவில்லை, ரத்தமாரே பாடலில் விஷ்வல் தனி ரகமாக அமைந்து ரசிக்க வைத்திருக்கிறார். சாதுவாக இருந்தும் மொத்தத்தில் பதுங்கி பாய்ந்தும் இருந்திருக்கிறார் முத்துவேல் பாண்டியன். ரசிகர்களுக்கு இது தலைவரின் அலைப்பறை ஜெயிலர் தான்.