சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலையா? அண்ணாத்த பட நஷ்டத்தால் குறைக்கப்பட்ட ரஜினியின் சம்பளம் !

Kamal Haasan Rajinikanth Vijay
6 நாட்கள் முன்
Jeeva

Jeeva

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை உலகளவிற்கு கொண்டு சென்ற முக்கிய பங்கு நடிகர் ரஜினிக்கு உண்டு.

உலகளவில் பெரிய வசூல் சாதனைகளை ரஜினியின் திரைப்படம் நிகழ்த்தி வரும் அப்படி அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் அதிக சம்பளம் வாங்கி வந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறி வருகிறது. அதன்படி கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இதற்கிடையே ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்காக ரூ. 118 கோடி சம்பளமாக வாங்கினாராம். ஆனால் அப்படத்தின் தோல்வியால அடுத்த படத்திற்கான சம்பளம் மடமடவென சரிந்துள்ளது.

ஆம், அதே நிறுவனம் ரஜினியின் அடுத்த திரைப்படமான ஜெயிலரை தயாரிக்கவுள்ளது. மேலும் நஷ்டம் காரணமாக ஜெயிலர் படத்திற்கு ரூ. 80 கோடி மட்டுமே ரஜினிக்கு சம்பளமாக தரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.