விஜய் மீது கோபத்தில் பழிவாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!! உண்மையை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..

Rajinikanth Vijay Gossip Today Jailer Leo
By Edward Jul 27, 2023 08:00 AM GMT
Report

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில் 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பல விவாதங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி விஜய் மீது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோபமாக இருக்கிறார் என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார்.

ஹுகும் பாடலில் அமைந்த வரிகள் விஜய்யை தாக்கித்தான் எழுதப்பட்டிருக்கிறது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் எந்தவொரு அப்டேட்டோ வெளியாகும் எந்த விசயமும் அவர்களுக்கு தெரியாமல் வெளியில் வராது.

இன்றைய ஹீரோக்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதுவும் வெளியாகும் பாடல் நடிகருக்கு தெரியாமல் எப்படி இருக்கும். ரஜினி சொல்ல விரும்புவதை, அந்த பாடல்களில் கடந்த காலத்தில் இடம்பெறும். அப்படி ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரஜினிகாந்திற்கு தெரியாமல் இருந்திருக்காது.

அந்த வரிகள் எல்லாம் விஜய்க்கு ஒரு பதிலடிதான். சரத்குமார் வாரிசு ஆடியோ லான்சில் ரஜினிகாந்த் மீது இருந்த கடுப்பில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.

ஆனால் விஜய் பேசும் போது ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்று மறுப்பும் தெரிவிக்காமல், தான் தான் சூப்பர் ஸ்டார் என்று ஆமோதித்து அமைதியாக இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கத்தான் ஜெயிலர் படத்தின் பாடல் வரிகள் என்று பிஸ்மி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.