வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்க வைபவ்!! இலங்கையை எச்சரித்த ஸ்ரீகாந்த்..
கடந்த மாதம் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஆடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் முத்த கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,15 வயதில் இளம் வீரர் தேசிய பொக்கியம் என்று பாராட்டியுள்ளார்.
மேலும், இந்த சிறுவனிடம் வாயை விட்டு வம்பிழுத்தால் இதற்கு பதலடி கொடுப்பார் என்று இலங்கை ஏ அணிக்கு நடந்ததை சுட்டிக்காட்டி எதிரணி வீரர்களை எச்சரித்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.

அவனது அதிரடி ஆட்டத்திலேயே போட்டி முடிந்துவிட்டது. ஒருவேளை அவன் ரன் குவிக்காமல் இருந்திருந்தால், இந்தியா தோற்றிருக்கும், அவனை வம்புக்கு இழுத்தால் என்ன நடக்கும் என்பதை இலங்கை வீரர்கள் இப்போது பார்த்திருப்பார்கள்.
அவர்கள் தங்களது வேலையை மட்டும் அமைதியாகப் பார்த்திருந்தால் ஒருவேளை கோப்பையை வென்றிருக்கலாம். 'இது ஒன்றும் ஐபிஎல் தொடர் அல்ல' என்று அவனிடம் சொல்ல வருகிறீர்களா? அதற்கு அவனது பதில் உங்களிடம் பந்துவீச்சு கூட்டணியே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.