கிட்டத்தட்ட ஒரு தலைமுறையையே அந்த விசயத்தில் நாசமாக்க காரணம் ரஜினிகாந்த்.. முதல் கல் வைத்ததே பாலசந்தர்..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தினை கோலிவுட்டில் யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் 71 வயதிலும் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார். அவரது ஸ்டைலிஷான நடிப்பு தான் இன்று வரையில் இளைஞர்களின் தாரக மந்திரமாக இருக்க காரணம்.
சூப்பர் ஸ்டார்
அப்படி அவர் மூன்று முடிச்சு படத்தில் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த போது புகைப்பிடிக்கும் பழகத்தை ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. அப்போது பெரிய ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட்டில் ரஜினிகாந்த் இல்லை. அந்த சமயத்தில் பாலச்சந்தரின் அசிஸ்டண்ட் சர்மாவுடன் தங்க வைக்கப்பட்டார் ரஜினி.
நைட் முழுவதும் சர்மாவுடன் தூங்கும் போது நான் நன்றாக வருவேனா என்றும் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.
இரவு முழுவதும் அப்படியே கேட்டு சர்மாவை தூங்கவிடாமல் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். காலையில் எழுந்ததும் சர்மா, பாலச்சந்தரிடம், இரவு முழுக்க என்னை தூங்கவிடாமலும் சிகரெட் பிடித்துக்கொண்டே இருந்தார் என்று போட்டுக்கொடுத்துள்ளார்.
சிகரெட் ஸ்டைல்
இதுபற்றி ரஜினியிடம் பாலச்சந்தர் கேட்க, நான் சிகரெட் பிடிப்பதில்லை என்று பொய் சொல்லியிருக்கிறார். உடனே ரஜினிகாந்தின் பாக்கெட்டில் கையைவிட்டு சிகரெட்டை எடுத்துள்ளார். பின் சிகரெட் பிடிக்க சொல்லியுள்ளார்.
ரஜினிகாந்தின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் அவருக்கு மிகவும் பிடித்து போக படத்தில் மோஷன் கேமராக்களை வரவழைத்து அந்த காட்சிகளை எடுத்துள்ளார். அந்த சிகரெட் ஸ்டைல் தான் அப்போதைய இளைஞர்களை நாசமாக்க காரணமாக இருந்துள்ளது. ரஜினி ஸ்டைலில் சிகரெட் பிடிக்க பல இளைஞர்கள் அதை பின் பற்றியும் இருக்கிறார்கள்.