நம்ப வைத்து ஏமாற்றிய சன் பிக்சர்ஸ்! உச்சகட்ட கொலைவெறியில் தளபதி, ரஜினிகாந்த் ரசிகர்கள்

vijay rajinikanth beast thalaivar169
By Edward Apr 01, 2022 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் இயக்குனர் நெல்சனை கமிட் செய்தார் தளபதி. பீஸ்ட் என்ற பெயரிடப்பட்ட இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பூஜா ஹெக்டே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ஆரம்பித்த இப்படப்பிடிப்பு வெளிநாடு உள்நாடு என ஷூட்டிங் எடுக்கப்பட்டு பொங்கல் கழித்து வெளியிட முடிவெடுத்தனர். தயாரிப்பு தரப்பில் எந்தவித பிரமோஷனையும் செய்யாமல் விஜய் ரசிகர்களை ஏமாற்றியே வந்தனர்.

அதிலும் எல்லோரும் எதிர்ப்பார்த்த இசை வெளியீட்டு விழாவையும் ரத்து செய்தது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். இதில் நெல்சனும் எதாவது அப்டேட் கொடுப்பார் என்று நினைத்த போது நாளை என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நாளை டிரைலர் வெளியாகும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தை நெல்சனும் கொடுத்தார். நாளை பீஸ்ட் படத்தின் டிரைலர் விஷயத்தில் ஏமாற்றாமல் இருந்தாலே போதும் என்று தளபதி ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.

மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கும் டிரைலர் நட்சத்திரங்கள் உட்பல பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் தளபதி ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்களோ இல்லையோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

அதற்கு காரணம் ரஜினிகாந்த் 169 படத்திலும் இதேபோன்று சன்பிக்சர்ஸ், நெல்சன் பழிவாங்கிடுவார்களோ என்று தானாம்.