காதல் தோல்வியில் வாடிய ரஜினிகாந்த்.. காதலி யார் தெரியுமா

Rajinikanth Jailer
By Kathick Aug 09, 2022 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கும் இப்படத்தில் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் நடிப்பதை உறுதி செய்துள்ளார்கள். அதே போல், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கிறார்களா இல்லையா என்று விரைவில் தெரிந்துவிடும்.

நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு நடிகர் சங்கம் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றிருந்தார். அப்போது அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரஜினியும் அழகாக பதில் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், அப்போது ரஜினியின் உங்களுடைய முதல் காதல் குறித்து கூறுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினி, ' அனைவரையும் போல் பள்ளி பருவத்தில் நானும் காதலித்தேன். யாராலும் மறக்கமுடியாத பருவ காதல் அது. அந்த காதலில் நான் தோல்வியடைந்துவிட்டேன் ' என்று கூறியுள்ளார்.