தங்கச்சி கதை போய் தம்பி கதைக்கு தாவும் சூப்பர் ஸ்டார்! யாருப்பா அந்த இயக்குனரு..

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாத்த படம் பெரியளவில் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் கூறுகையில் படத்தில் ஷேர் கொடுத்து மீது எங்களுக்கு நஷ்டம் தான் என்று கூறிகிறார்கள்.

அதற்காக ரஜினிகாந்த் அப்படத்திற்காக சம்பளத்தை குறைத்துள்ளார். மேலும் மற்ற படக்குழுவினருக்கு சம்பளமும் குறைத்துள்ளனர். இதையடுத்து ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்விதான். அப்படி மீண்டும் சிறுத்தை சிவா படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதாகவும் அப்படம் முடிந்த பிறகு தேசிங்கு பெரியசாமி அல்லது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்