வாழ்த்து தெரிவித்த ரஜினி.. நாசமான போன திரைப்படம்.. 100 கோடி நஷ்டம்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் பாலிவுட்டில் வெளிவந்த கணபத் எனும் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார். ஹிந்தியில் மூத்த நடிகராக இருக்கும் ஜாக்கி ஷெரோப் மகனும், வளர்ந்து வரும் நடிகருமான டைகர் ஷெரோப் தான் இப்படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.
தனது நெருங்கிய நண்பரின் மகன் நடித்துள்ள படம் என்பதால் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்படத்தின் டைகர் ஷெரோப் உடன் இணைந்து அமிதாப் பச்சன், க்ரித்தி சனோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும் கூட கணபத் திரைப்படம் மாபெரும் தோல்வியடைந்துள்ளது.
உலக அளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் மட்டுமே தான் இப்படம் இதுவரை வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த கணபத் திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து ரஜினியின் வாழ்த்து பதிவையும் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஒரு படம் ஓடுவது என்பது அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதில் தான் இருக்கிறதே தவிர்த்து, மற்றவர்களின் சொல்வது இல்லை. ரஜினிகாந்த் படம் நன்றாக ஓடவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பதிவு செய்ததை சிலர் இப்படி ட்ரோல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
