ரஜினியின் கூலி ரூ. 500 கோடி வசூல்.. படக்குழு போட்ட மாஸ் திட்டம்

Rajinikanth Lokesh Kanagaraj Coolie
By Bhavya Aug 24, 2025 02:30 AM GMT
Report

கூலி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் கூலி.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான் உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் விரைவில் ரூ. 500 கோடி வசூல் பெறவுள்ளது.

இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடும் வகையில் பார்ட்டி வைக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு படம் அதிகம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு கார், செயின் பரிசளிப்பது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், விக்ரம் படத்தின் வெற்றி முன்னிட்டு கமல்ஹாசன் உதவி இயக்குநர்களுக்கு காஸ்ட்லி பைக், செயின் பரிசளித்தார். இந்த படத்தின் இயக்குநர் லோகேசுக்கும் கார் பரிசளிக்கப்பட்டது.

ரஜினியின் கூலி ரூ. 500 கோடி வசூல்.. படக்குழு போட்ட மாஸ் திட்டம் | Rajinikanth Coolie Movie Mass Hit

மாஸ் திட்டம்

இந்நிலையில், தற்போது கூலி படத்தின் வெற்றியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜுக்கு என்ன பரிசு கிடைக்க உள்ளது என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.  

ரஜினியின் கூலி ரூ. 500 கோடி வசூல்.. படக்குழு போட்ட மாஸ் திட்டம் | Rajinikanth Coolie Movie Mass Hit