அம்பானி வீட்டு கல்யாணத்தில் மாஸ் ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்..
இந்த வருடம் ஆரம்பம் ஆனதில் இருந்து ஒரு குடும்பத்தின் திருமண விழா கொண்டாட்டம் தான் பெரிய அளவில் நடந்து வருகிறது.
ப்ரீ வெட்டிங், இத்தாலி கொண்டாட்டம் என ஒரு திருமணத்தை ஏதேதோ பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானியின் இளையமகன் ஆனந்த் திருமணம் தான் கொண்டாட்டமாக நடக்கிறது.
நேற்று ஆனந்த்-ராதிகாவின் திருமணம் படு கோலாகலமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சிக்கு இந்தியா மற்றும் உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி, மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் மகன் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து பின் அனைவரும் பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டத்தில் இருந்தனர். ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
#Rajnikanth and #AnilKapoor dancing away with #AnantAmbani at the latter's wedding with #RadhikaMerchant today.#Trending pic.twitter.com/lkJNnFf4zf
— Filmfare (@filmfare) July 12, 2024