கமல் மகள்கள் செய்ததை போல் ரஜினிகாந்த் மகள் அதை செய்யல!! வளரமுடியாமல் தவிக்கும் வாரிசுகள்..
சினிமாத்துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி அழகு பார்ப்பார்கள். அப்பா, அம்மா திரையுலகில் ஜொலித்தாலும் அவர்களின் வழியில் வாரிசுகளும் வந்துவிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைப்பது இல்லை, அப்படி கிடைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே ஜெய்க்க முடியும்.அப்படி அம்மாவோ அப்பாவோ பெரிய ஆள் என்பதை பயன்படுத்தாமல் முன்னேறிவர்களை பார்ப்போம்..
உலக நாயகன் மகள்கள்
உலக நாயகன் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் அம்மா அப்பா பெரிய நடிகர் நடிகை என நினைக்காமல் அவர்களின் உதவி இல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதில் மூத்த மகள் ஸ்ருதியின் கேரியர் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால் அக்ஷரா அதற்காக உழைத்தும் வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்கள்
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா செளந்தர்யா அப்படி கிடையாது. அப்பாவின் உதவியால் வாய்ப்பு பெற்று அவரை வைத்தே இயக்கவும் செய்திருக்கிறார்கள். செளந்தர்யாவின் கேரியருக்காக பல கோடி செலவில் கோச்சடையான் படத்திலும் ரஜினிகாந்த் நடித்து மகளுக்கு உதவினார்.
ஐஸ்வர்யா தனுஷை விட்டு தனியாக இருப்பதை நினைத்து அவர் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து படத்தின் மார்க்கெட்டை உயர்த்தி உதவியிருக்கிறார்.
இருவரின் கேரியரை போல் திருமண வாழ்க்கையையும் சரியான அமைத்து வைக்கமுடியவில்லையே என்று ரஜினிகாந்த் வருத்தமும்பட்டதாக கூறி வருகிறார்கள்.
அதேபோல் சரத்குமார் மகள், வரலட்சுமியுன் சினிமாவில் நடித்து வளரும் நடிகையாகவே பல ஆண்டுகள் திகழ்ந்து வருகிறார். அதேபோல் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனும் சினிமாவில் நடித்திருந்தாலும் நல்ல இடத்தை பிடிக்காமல் போய் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்