புதிய பழைய கட்சிகள்!! விஜய்யை ஓபனாக அட்டாக் செய்தாரா ரஜினிகாந்த்..
தென்னிந்திய சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய பழைய கட்சிகள்
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகந்த், இந்திய அரசியலிலேயே ஒரு நட்சத்திரமாகவும் இந்திய நாட்டை ஆளுகின்ற கட்சிக்கும்.
புதிய பழைய எதிர்க்காட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, வாங்க 2026ல் பாத்துக்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் செயப்பட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், எனது நண்பர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம் என்று பேச ஆரம்பித்துள்ளா ரஜினிகாந்த்.
இதனை பார்த்த பலரும் மேடைக்கு அலங்காரம் சேர்க்கும் வகையில் பேசவில்லை, அவர் புதிய எதிர்க்கட்சிகள் என்று நடிகர் விஜய்யை தான் குறிப்பிட்டு பேசியதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புதிய கட்சி என்று குறிப்பிடக்காரணமே விஜய்யை அட்டாக் செய்வதற்குத்தான் என்று ஒருசிலர் கூறி வருகிறார்கள்.