குடித்து மாட்டிக்கொண்ட ரஜினிகாந்த்!! செருப்பால் அடிப்பேனு திட்டிய பிரபல இயக்குனர்..
சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது ரஜினிகாந்த் சிக்ரெட் பிடிக்கும் ஸ்டைல் தான். தன்னுடைய தனித்துவமான நடிப்பு ஸ்டைலால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது இருப்பதை விட எங்கே உயரத்தில் இருந்திருப்பேன் என்றும் குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம் என்று தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்தே புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்டப்பழக்கத்தை வைத்திருந்தார். ஒருமுறை கே பாலச்சந்தர் இயக்கிய ஒரு படத்தில், ஒரு ஷாட் மிஸ் ஆகிவிட்டது அதை எடுக்க உடனே கூப்பிட்டார் என்று கூறினார்கள்.
அப்போது ஆடிப்போய்ட்டேன் நான் தண்ணி போட்டு இருக்கேன். பின் மேக்கப் போட்டு, ஸ்ப்ரே எல்லாம் அடிச்சு சென்றேன். அங்கு போனது என்னிடம் நாகேஷ் தெரியுமா, எப்படி ஒரு நடிகர் தெரியுமா, அவன் முன்னாலே நீ எல்லாம் ஒரு இருப்புக்கு கூட ஒன்னுமே இல்ல.
அவன் குடிச்சதால தான் வாழ்க்கையை இழந்தான். இனிமே ஷூட்டிங்ல தண்ணி போடுறத பார்த்தேன் செருப்பால அடிப்பேன் என்று கூறினார். அன்னிக்கு நான் விட்டது தான் எதையும் கையில் தொடல என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.