ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும் உணவுகள்.. ஆனால், இந்த உணவை தவிர்த்துவிடுவார்..
ரஜினிகாந்த் விரும்பி சாம்பிடும் மற்றும் தவிர்க்கும் உணவுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
ரஜினிக்கு பிடித்த உணவுகள்
ரஜினிகாந்த் வத்த குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம். அந்த வத்த குழம்பானது நன்றாக கெட்டியாக, வெயிலில் காய வைத்த காய்கறிகளுடன், புளி, மற்றும் மணத்தக்காளி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனை சூடான சாதம் மற்றும் நெய்யுடன் கலந்து அவர் எடுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது.

அடுத்ததாக பால் பாயசம். பால் கெட்டியாகி, தந்த நிறம் வரும் வரை சமைக்கப்படுகிறது. கிரீம் போன்ற சுவை வரும் வரை அது தயாரிக்கப்படுகிறது. அதற்கு பொறுமையாக இருந்து, சுட வைக்க வேண்டும்.
இதன்பின், ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவாக மாதுளை பழச்சாறு உள்ளது.
ரஜினிகாந்த் தவிர்க்கும் உணவு
நடிகர் ரஜினிகாந்த் தனது உணவுகளில் உப்பு, சர்க்கரை, மைதா, பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தவிர்க்கிறார் என தகவல் கூறப்படுகிறது.