நடிகர் சிவாஜி கணேசனின் கடைசி ஆசை! நிறைவேற்றிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
Rajinikanth
Sivaji Ganesan
By Kathick
நடிப்புக்கு உதாரணமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நெருங்கி பழகிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர்கள் இருவரும் இணைந்து படையப்பா படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுவரை ரூ. 30 லட்சம் ப்ரீ புக்கிங்கில் வசூலாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், படையப்பா ரீ ரிலீஸ் குறித்து வீடியோ ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் அவர்கள் குறித்து மனம் உடைந்து பேசியது படுவைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, "நான் இறந்துபோனா என் உடம்பு கூடயே நீ வருகிறாயாடா என்று சிவாஜி சார் என்னிடம் கேட்டார். சிவாஜி சார் இறந்ததற்கு பின் அவரின் உடல் வைத்திருந்த வாகனத்தில் கடைசி வரை போனேன்" என்றார் ரஜினி.