வாயா-போயா என்று கூப்பிட்ட நடிகர் கவுண்டமணி! திட்டிய இயக்குநர் வாசுவிடம் சூப்பர் ஸ்டார் கூறியது இதுதானாம்!

rajinikanth goundamani mannan pvasu
By Edward May 19, 2021 01:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகராக நடித்து சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு பல ஆண்டுகளாக தக்கவைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து யாரும் காணாத வெற்றியை கண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

2.0, பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு பிறகு, இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடித்த நடிகர் நடிகைகள் தமிழகம் திரும்பினர். இப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மனதில் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த் பற்றி பல பிரபலங்கள்

புகழ்ந்து கூறுவது வழக்கம். அந்தவகையில், ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்த படங்களில் ஒன்று மன்னன். இப்படத்தின் போது ரஜினிகாந்த்தை நடிகர் கவுண்டமணி வாயா போயா என்று கூறி நடித்திருப்பார். இது அப்படத்தின் இயக்குநர் பி வாசுவிற்கு மனசங்கடமாக இருந்துள்ளது.

அதனால் பி வாசு அவர்கள் நடிகர் கவுண்டமணியிடம் வாயா போயா என்று அழைப்பது ரசிகர்கள் படத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இதையறிந்த சூப்பர் ஸ்டார், அவர் அப்படி கூப்பிட்டால் என்ன, என்னை எப்படிவேண்டுமானாலும் கூப்பிடலாம் அவர் என்றும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் கூறியுள்ளார்.