அந்த காட்சியில் 8 டேக்!! 52 வயது நடிகை முன் அசிங்கப்பட்ட ரஜினிகாந்த்.. காரணமே அவர் தான்..
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஆடியோ லான்ச் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேசிய பல விசயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நெல்சன் இயக்கம் பற்றி காமெடியாக பல விசயங்களை கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
யோகி பாபுவுடன் காரில் ஒரு ஷாட் எடுக்கும் போது எக்ஸ்பிரஷனுக்காக பல டேக் எடுத்தார். அதனால் யோகி பாபு என்னிடம் வந்து சாவடிக்கிறான் சார்ன்னு சொல்லுவார். மேலும், ரம்யா கிருஷ்ணனுடன் 24 வருஷத்துக்கு அப்புறம் நடிக்கிறேன்.
ஒரு காட்சியில் ரம்யா கிருஷ்ணனிடம் ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு பக்கத்துல இருக்க மருமகளிடம் இரு எக்ஸ்பிரஷன் கொடுக்கனும் அது 8 டேக் எடுத்தேன்.
நீலாம்பரி முன்னாலே இந்த படையப்பா மானமே போச்சுங்கன்னு எனக்கு நானே பேசிக்கொண்டேன் என்று காமெடியாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்ன்னு மேடையில் கெத்தை காட்டாமல் உண்மையை கூறிய ரஜினிகாந்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
You May Like This Video