ரஜினிக்கு நான் ஜோடியா..! சூப்பர்ஸ்டார் ரஜினியை அசிங்கப்படுத்திய ஜெயலலிதா..
தமிழசினிமாவில் வில்லனாக களமிறங்கி, அதன்பின் ஹீரோவாக தனக்கென்று ஒரு தனி இடத்தை சம்பாதித்தவர் நடிகர் ரஜினிகாந்த. இவருடன் இணைந்து நடிக்காத நடிகைகளே இல்லை. இந்நிலையில், பில்லா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க, அப்போதைய முன்னணி நடிகை ஜெயலலிதாவிடம் படக்குழு கேட்டுள்ளது.
ஆனால், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா தெரிவித்துவிட்டார். இதனை, உடனடியாக பத்திரிகையாளர்கள் ஊத்தி பெருசாக்கிவிட்டார்கள். ரஜினிக்கும், ஜெயலலிதாவிற்கும் இருக்கும் சில மோதல்களின் காரணமாக தான், ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என்று பத்திரிகையாளர்கள் எழுத துவங்கிவிட்டனர்.
ஆனால், நடிகை ஜெயலலிதா அப்போது சினிமாவில் இருந்து விலக போகிறேன் அதனால், தான் அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினேன், என கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார். ஆனால் அதற்கும் பத்திரிகையாளர்கள் இதனை பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டனர்.