கூலி படம் வெளியான நிலையில்.. நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருக்கு திடீர் பயணம். எங்கு?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திடீர் பயணம்
இந்நிலையில், திடீரென்று நேற்று பெங்களூருக்கு ரஜினிகாந்த் சென்றுள்ளார். வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்து எளிமையாக, பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ரஜினி மடத்தில் சாமி தரிசனம் செய்து, சிறிது நேரம் தியானம் செய்துள்ளார். அது தொடர்பான போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
Superstar #Rajinikanth is chilling in Bangalore now, while the world is hyped for #Coolie release tomorrow 😀❤️🔥 pic.twitter.com/QCPcoHS63S
— AmuthaBharathi (@CinemaWithAB) August 13, 2025