தகவல் கொடுத்த ஸ்ரீதேவி..இயக்குனரை வீட்டுக்கு சென்றே எச்சரித்த ரஜினி - கமல்..
16 வயதினிலே
80-களில் இருந்து மற்ற மொழிகளில் வெற்றி பெற்றை படங்களின் உரிமையை வாங்கி அதை தங்கள் மொழியில், முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து இயக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது வரை இந்த சம்பவம நடந்து வரும் நிலையில் இயக்குநர் ராகவேந்திர ராவ், இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படத்தை Padaharella Vayasu என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
அதிலும் ஸ்ரீதேவி தான் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்போது கிளைமேக்ஸ் காட்சியை மாற்றியதால் ரஜினி - கமல் இருவரும் தன்னை வீடு தேடி வந்து எச்சரித்ததாக இயக்குநர் ராகவேந்திர ராய் சமீபத்தில் பேட்டியில் கூறியிருக்கிறார்.
கரானா மொகுடு கிளைமேக்ஸ்
அதில், தமிழில் படத்தை பார்த்ததும் நன்றாக இருந்தது. ஆனால் கிளைமேக் எனக்கு பிடிக்கவில்லை, சோகமாக இருந்தது. தமிழ் ரசிகர்கள் அதை ஏற்பார்கள் தெலுங்கில் இது செல்லாது என்பதாலும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. மகிழ்ச்சியான முடிவு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பி கிளைமேக்ஸ் காட்சியை மாற்றினால் கெட்டுப்போகும் என்பது ஆபத்தான என்று நினைத்தும் ரிஸ்க் எடுத்தேன்.
கடைசியில் ஹீரோ வில்லனை கொன்று சிறைக்கு செல்வார், ஹீரோயின் ஹீரோ எப்போது வருவார், தன் கழுத்தில் தாலிக்கட்டுவார் என்று காத்திருப்பது போல் இருக்கும். ஹீரோ வருவாரா? வரமாட்டாரா? என்று ஹீரோயின் காத்திருக்கும் போதே குழப்பத்துடனும் வருத்தத்துடனும் முடித்து, ஹீரோ வரும் வரை அவள் வாழ்க்கை அவ்வளவு தான் என்று தமிழில் இருக்கும். ஆனால், தெலுங்கில் கிளைமேக்ஸை இன்னும் நிட்டித்து, ரயில் நிலையத்தில் பெட்டிகளுடன் ஹீரோவுக்காக மல்லி (ஸ்ரீதேவி) காத்திருக்க, காதலன் வந்து தாலிக்கட்டி கூட்டிச்செல்வது போல் எடுத்தேன்.
எச்சரித்த ரஜினி - கமல்
படம் ரிலீஸுக்காக தாயாராக இருந்தபோது கிளைமேக்ஸை மாற்றியதை யாரோ ரஜினி - கம்லுக்கு கூறிவிட்டனர். இதையறிந்த ஸ்ரீதேவி, என்னிடம் போன் செய்து ரஜினி, கமல் உங்கள் வீட்டிற்கு வருகிறாரகளாம் என்று கூறியதில் ஆச்சரியத்தோடு காத்திருந்தேன். இருவரும் என்னிடம் படம் நன்றாக எடுத்துள்ளீர்கள், ஆனால் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றுவதால் படத்தின் உணர்வு போய்விடும். படம் தோல்வியடையும் என்று எச்சரித்தனர்.
குறிப்பாக ரஜினி தான் இதை சொன்னார். ரஜினிகாந்தை பார்த்து, ஹீரோயின் அப்படி வாழ்நாள் முழுவதும் வருவாரா? வரமாட்டாரா என்ற குழப்பத்தில் ஏன் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு ரஜினியிடம் பதில் சொல்லவில்லை. படத்தை அப்படியே வெளியிடுகிறேன் ரிப்போர்ட் நன்றாக தொடருவேன் இல்லை என்றால் உங்களை போல் கிளைமேக்ஸ் வைத்துவிடுகிறேன் என்று கூறினேன். அப்படி படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் கொடுத்ததாக ரகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.