லதாவை விவாகரத்து செய்யவிருந்த ரஜினிகாந்த்.. மருமகனை போலவே மாமனாரும் இருக்காரே

divorce dhanush rajinikanth latha aiswarya dhanush conterversy
By Kathick Jan 21, 2022 01:16 PM GMT
Report

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். அதே போல் ஐஸ்வர்யாவும் இது பரஸ்பரமான பிரிவு தான் என்று கூறியிருந்தார். 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ளும் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

விவாகரத்து என அறிவிப்பு வெளியான அடுத்த நாளில், இது விவகாரத்து இல்லை, கணவன் மனைவிக்குள் வரும் சண்டை தான், விரைவில் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். ஆனால், இதன்பின் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில், அடுத்த அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா இப்போது எப்படி விவகாரத்து பெற்று பிரியவுள்ளார்களோ, அதே போல் பல வருடங்களுக்கு முன்பு ரஜினியும் - லதாவும் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு.பிரிவிருந்தார்களாம்.

ஆனால் அவர்கள் இருவரிடமும் இயக்குனர் பாலச்சந்தர் உட்பட நண்பர்கள் அனைவரும் பேசி அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர். இன்று ரஜினி தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதே போல் தங்களது மகன்களை நினைவில் வைத்துக்கொண்டு தனுஷ் - ஐஸ்வர்யா முடிவெடுப்பார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.