மேடையில் சூப்பர் ஸ்டாரை படுகேவலமாக பேசி அசிங்கபடுத்திய ஆச்சி!! ரஜினிகாந்த் சொன்ன அந்த ஒரு வார்த்தை..
தமிழ் சினிமாவில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய சாதனையை படைத்தவர் தான் நடிகை ஆச்சி மனோரமா. நடிகையை தாண்டி நல்ல மனமும் கொண்டு புகழ் பெற்றார். அப்படி மனோரமா வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட காரணம் ஒரு அரசியல் மேடை தான்.
ரஜினிகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த மனோரமா, ரஜினிகாந்தை பார்த்து படுமோசமான வார்த்தைகளை பேசி விமர்சித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பின் 6 மாதங்கள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தார். அப்போது தான் மனோரமாவிற்கு அருணாச்சலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ஆனால் படப்பிடிப்பு முடியும் வரை குற்ற உணர்ச்சியில் மனோரமா ரஜினியை நேருக்கு நேர் பார்க்காமல் இருந்து தவித்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்த் இதுபற்றி மனோரமாவை பதிலுக்கு பதில் எங்கும் விமர்சித்து பேசியதில்லை. அப்படி மனோரமாவின் கலை உலக பொன்விழாவிற்கு ரஜினிகாந்தை நேரில் சென்று சந்திக்காமல் போனில் சொன்னதை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி சென்றார்.
அப்போது ரஜினிகாந்த் மேடையில், பில்லா படத்தின் சமயத்தில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ஒருவர் பைத்தியம் பைத்தியம் என்று ரஜினியை கூறினார்கள்.
உடனே மனோரமா ஆவேசத்துடன் அங்கிருந்தவர்கள் கடுமையாக திட்டித்தீர்த்தார். மனோரமா பொன்விழா நிகழ்ச்சியில் அந்த சம்பவத்தை கூறி அன்று அனைத்த கை, எத்தனை முறை அடித்தாலும் நான் தாங்கிக்கொள்வேன் என்று ஆச்சி மனோரமாவை வாழ்த்தியும் வந்தார்.