ரஜினி தம்பியாக நடித்த நடிகருக்கு இந்த நிலையா?.. முகம் சிதைந்து! வாழ்வில் ஏற்பட்ட சோகம்

Rajinikanth Tamil Cinema Tamil Actors
By Bhavya Jul 30, 2025 11:00 AM GMT
Report

பாட்ஷா

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்த படம் பாட்ஷா. இப்படத்தில் ரஜினியுடன் விஜயகுமார், நக்மா, ஆனந்த் ராஜ், தேவன், சரண்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதில், ரஜினியின் தம்பியாக சிவா என்ற ரோலில் நடித்த கன்னட நடிகர் சசிகுமாரின் வாழ்க்கை குறித்து சில சோகமான விஷயங்கள் வெளியாகி உள்ளது.

ரஜினி தம்பியாக நடித்த நடிகருக்கு இந்த நிலையா?.. முகம் சிதைந்து! வாழ்வில் ஏற்பட்ட சோகம் | Rajinikanth Movie Actor Life After Accident

இந்த நிலையா?

அதாவது, 90ஸ் காலகட்டத்தில் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் நடந்த கார் விபத்தில் சசிகுமார் முகத்தில் பலமாக அடிபட்டது. அதோடு அவர் முகம் பாழாகி போனது.

பலகட்ட சர்ஜரிகளுக்கு பிறகு அவர் புதிய முகத்தை அவரே காண பயப்பட்டார். வெளியே வரவே பயந்து வீட்டினுள்ளேயே முடங்கினார். பின் தயாரிப்பாளர் ஒருவர் அவரை படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், அவரது புதிய முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் எதுவும் வரவில்லை.

இதனால், சினிமாவில் இருந்து இவரது கவனத்தை அரசியலில் செலுத்தினார். தற்போதும் அரசியலில் பிஸியாக வலம் வருகிறார். இவர் வாழ்வும் பாட்சா படம் போன்று விபத்துக்கு முன்பு பாட்சாவாகவும், விபத்துக்குப்பின் மாணிக்கமாகவும் உள்ளது.   

ரஜினி தம்பியாக நடித்த நடிகருக்கு இந்த நிலையா?.. முகம் சிதைந்து! வாழ்வில் ஏற்பட்ட சோகம் | Rajinikanth Movie Actor Life After Accident