நீதா அம்பானியின் அழகிற்கு இப்படியொரு பால் வகை தான் காரணமாம்!! என்ன ஸ்பெஷல் தெரியுமா..
முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார் வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதிலும் நீதா அம்பானி தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல விஷயங்களை செய்து பிரம்பிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் 60 வயதை எட்டிய நீதா அம்பானி, தன்னுடைய குடும்பத்தினருக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கி வருகிறார். அம்பானி குடும்பத்தின் அன்றாட முக்கிய பொருளான பால் கூட பிரத்தியேகமான மற்றும் அதிக சத்தான மூலத்திலிருந்து வரவழைக்கப்படுகிறதாம்.
ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் பசு
நெதர்லாந்தை சேர்ந்த ஃப்ரீசியன் இனமான ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் பசுக்களின் பாலை தான் அம்பானி குடும்பத்தின் அருந்துகிறார்களாம். அவர்கள் அருந்தும் பால், புனேவில் அமைந்துள்ள 35 ஏக்கர் பரப்பளவிலான பாக்யலக்ஷ்மி பால் பண்ணையில் இருந்து பெறப்படுகிறது.
இந்த பண்ணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோல்ஸ்டீன் - ஃப்ரீசியன் பசுக்கள் இருக்கிறது. பசுக்களுக்கு RO தண்ணீர் வழகப்பட்டும் அவற்றின் வசதிக்காக குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட ரப்பர் பூசப்பட்ட மெத்தைகளில் ஓய்வெடுக்கும் வசதிகள் செய்யப்படுகிறது. இப்பசுக்களின் பாலில் சற்று குறைந்த பட்டர்ஃபேட் அளவுகள் இருக்கிறது.
பொதுவாக 3.6 சதவீதம் முதல் 3.8 சதவீதம் வரை இருக்கும், இது ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட நபர்களுக்கு அதன் ஈர்ப்பை அதிகரிக்கும். இவ்வகையான பசுக்கள் உலகின் பால் உற்பத்தி செய்யும் பசு இனமாக புகழப்பெற்றது. ஹோல்ஸ்டீன் - ஃப்ரீசியன் பசு தினமும் சுமார் 25 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது.
இது ஆண்டுக்கு மொத்தம் 9,500 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்கிறது. அம்பானி குடும்பத்தினருக்கு தினமும் 163 கிமீ தூரம் பயணித்து , உறைந்த ஹோல்ஸ்டீன் - ஃப்ரீசியன் பால் டெலிவரி வேனில் 3.5 மணி நேரத்தில் மும்பையில் உள்ள ஆண்டிலியா வீட்டை அடைகிறதாம். இந்த பாலை குடிப்பதால் தான் நீதா அம்பானி 60 வயதிலும் இளமையான தோற்றத்தில் இருப்பதாக பலரும் வியந்து பார்க்கிறார்கள்.