உறவினர் பேசிய சர்ச்சை வார்த்தை!! ரஜினி படத்துக்கு தயாரிப்பாளர் பட்ட கஷ்டம்..
ஒய்.ஜி. மகேந்திரா
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான ஒய்.ஜி. மகேந்திரா அளித்த பேட்டியொன்றில் சமீபத்தில் மறைந்த AVM சரவணன் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் அவரது தயாரிப்பில் நடித்த படங்கள் டிவியில் ஒளிப்பரப்பானால் மறுநாள் அவரிடமிருந்து எனக்கு நிச்சயமாக போன் வரும். அப்போது அந்த படத்தை பற்றி அவர் சிலாகித்து பேசுவார். அப்போது படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டிருப்போம்.
கிழிஞ்சது லம்பாடி லுங்கி
அந்த சமயத்தில் நீ சொன்ன ஒரு வசனத்தால் சென்சாரில் என் படம் மாட்டிக்கிச்சியா என்ற AVM சரவணன் சொன்னார். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நடிக்கும்போது நான் கிழிஞ்சது லம்பாடி லுங்கி என்று சொன்னேன். இப்படம் சென்சாருக்கு போனபோது, இந்த வசனத்திற்காக சென்சார் கொடுக்கவில்லை.

இது லுங்கி தானே சார் என்று சொன்னாலும், இல்லை இல்லை ஒய்.ஜி. மகேந்திரா சொன்னால், அதில் உள்ளர்த்தம் ஏதாவது இருக்கும் என்று சொல்லி சென்சார் கொடுக்கவில்லை.
அதன்பின் அவர்களை சமாளிக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்யா என்று சொன்னார். இப்படி நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்.

அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்படி பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ஒய் ஜி மகேந்திரா.