ரஜினியுடன் இந்த படத்தில் நானா! தூக்கி எறிந்த மறைந்த நடிகை ஜெயலலிதா! இதுதான் காரணம்.. REWIND
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மகுடம் சூட்டிக்கொண்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பகாலத்தில் அவருடன் நடிக்காத நடிகைகளே கிடையாது என்று கூறுமளவிற்கு புகழை அப்பவே எட்டினார் ரஜினி. இதற்கிடையில் அரசியல் பேசி சில சர்ச்சையிலும் மாட்டினார். இந்நிலையில், 980களில் நடிகர் ரஜினிகாந்தின் பெரும்பாலான திரைப்படங்கள் இவருக்கு வெற்றித் திரைப்படமாகவே அமைந்தது.
இவர் திரைப்படத்தில் வரும் வசனங்களில் பல வசனம் அரசியலைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். அந்தக் காலகட்டத்தில் நடிகை ஜெயலலிதா அரசியலில் நுழைந்தார். அப்போது நடிகை ஜெயலலிதாவுக்கு, நடிகர் ரஜினி உடன் பில்லா என்ற திரைப்படத்தில் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜெயலலிதா, தனக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பமில்லை என்று மறுத்து விட்டார்.
தயாரிப்பாளர் பாலாஜி, நடிகை ஜெயலலிதாவிடம் பில்லா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தருமாறு வேண்டி கேட்டபோது கூட, வேண்டாம் என்று மறுத்து விட்டார் நடிகை ஜெயலலிதா. அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீபிரியாவை நடிக்க வைத்து சூப்பர் ஹிட் கொடுத்தார். இதற்கிடையில் ஜெயலலிதா அப்படத்தினை ஏற்க மறுத்து தூக்கி எறிய ரஜினிகாந்தின் அனைத்து கருத்துக்களும் அரசியலாக்கப்பட்டது தானாம்.
அரசியலில் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருந்து பேசி வந்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் செயல்பாடு முதலமைச்சருக்கு பிடிக்க பல சாதனைகளை செய்து பின் சினிமாத்துறைக்கும் நல்ல சலுகைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.