பல கோடி சொத்துக்கு அதிபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. சொத்து மதிப்பு எவ்வளவு?

Rajinikanth Tamil Actors Net worth
By Bhavya Dec 12, 2025 07:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், நித்யா ராம், ஸ்ருதிஹாசன், சார்லி, லொள்ளு சபா மாறன், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைத்த ரஜினிகாந்த். 50 ஆண்டுகளை சினிமாவில் கடந்து தனக்கென்று தனி வரலாறை உருவாக்கியுள்ளார்.

பல கோடி சொத்துக்கு அதிபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. சொத்து மதிப்பு எவ்வளவு? | Rajinikanth Net Worth Details Goes Viral

எவ்வளவு?  

இந்நிலையில், இன்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, தற்போது ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம் பெரும் ரஜினிகாந்த். ரூ. 430 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். மேலும், இவருக்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது.

சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்யும் ரஜினிக்கு, சொந்தமாக கல்யாண மண்டபமும் உள்ளது. இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, பென்ஸ், இன்னோவா போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றன.