50 வருட சினிமா வாழ்க்கை..பாக்யராஜ் செஞ்ச ஒரே தப்பு! ரஜினிகந்த் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் 70, 80களில் தன்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பன்முகத்திறமையால் கொடிக்கட்டி பறந்தவர்தான் இயக்குநர் பாக்யராஜ்.
பாக்யராஜின் 50 ஆண்டு
பாக்யராஜின் சினிமா வாழ்க்கை 50 ஆண்டுகளை கடந்தநிலையில், அதை சிறப்பிக்கும் விதமான பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது.

அந்நிகழ்ச்சிக்கு, ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா, உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த்
மேடையில் சுவாரஸ்யமாக பேசிய ரஜினிகாந்த், பாக்யராஜிடம் இருக்கிற ஒரு பெரிய மைனஸ் என்னவென்றால், கதை, கதாபாத்திரம், படம்னு சொல்லியே வாழ்க்கையை விட்டுவிடுவார். அதனால்தான் அவருக்கு பேரு, புகழ் எல்லாம் வந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கும் மைண்ட் வரவில்லை.
அவர் படத்தோட ரைட்ஸை மத்த மொழிக்காரங்க வாங்கி அவங்கதான் நிறைய சம்பாதிச்சாங்க, அதையெல்லாம் மட்டும் அவர் அப்பவே சரியா கவனிச்சு இருந்தாருன்னா, போட் கிளப்ல ஒரு அஞ்சு வீடு, போயஸ் கார்டன்ல ஒரு அஞ்சு வீடுன்னு வாங்கிப்போட்டு இருக்கலாம் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.