பீஸ்ட் கொடுத்த பிளாப்க்கு முக்கிய காரணமே நடிகர்கள் தான்!! மேடையில் உண்மையை உடைத்த ரஜினிகாந்த்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெல்சன். பல முன்னணி நடிகர்கள் நடித்தும் அனிருத் இசையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது ஜெயிலர் படம். இப்படத்தின் மூன்று பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஜூலை 28ல் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஜினிகாந்த் நெல்சன் - ஜெயிலர்
நிகழ்ச்சி மேடையில் பேசிய ரஜினிகாந்த் நெல்சன் எப்படி கதை சொன்னார் பீஸ்ட் படத்தின் பிளாப்பிற்கு பின் என்னுடைய ரியாக்ஷன் என்ன என்று பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அண்ணாத்த படத்தினை முடித்து சில நாட்களுக்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து கண்ணன், நெல்சன் ஒரு கதையை வைத்திருக்கிறார் கேளுங்க என்று சொன்னார்.
ஓகே என்று ஒன்லைன் கதையை நெல்சன் கூறச்சொன்னேன். பின் அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருப்பதால் 10 நாட்கள் டைம் வேண்டும் என்று கேட்டதாக் அதற்கு சம்மதம் கூறினேன். அதன்பின் 10 நாட்களுக்கு பின் என் வீட்டிற்கு நெல்சன் கதையை விவரமாக கூறிய போது 100 சதவீதத்திற்கும் மேல் நம்பிக்கை இருந்தது கதை சூப்பர் என்றேன்.
பீஸ்ட் பிளாப்
அதன்பின் பீஸ்ட் படத்தை முடிந்து வெளியான போது நெகட்டிவ் விமர்சனம். இதன்பின் எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பிஸ்ட் படத்தை பற்றி எனக்கு கால் செய்தார்கள். பிளாப் ஆனதால் நெல்சன் வேண்டுமா என்று பலர் கூறினார்கள்.
எப்பவுமே ஒரு இயக்குனர் தோக்குறது இல்ல, இயக்குனர் எடுக்குற சப்ஜெட்க் ஃபைல் ஆகும், சப்ஜெக்ட்டுக்காக சரியான காஸ்டிங் பண்ணலன்னா தான் ஃபைல் ஆகுமே தவிர இயக்குனர் ஃபைல் ஆகமாட்டார். முனே படம் பண்ணிருக்காரு, ஜெயிலர் அறிவித்தாச்சி, இதை நிறுத்தினால் அவர் எதிர்காலம் என்ன ஆகும். முடிவெடுப்பது நான்.
கலாநிதி மாறன் என்னிடம் ரிவ்யூ சரியில்ல, ர்ப்போர்ட் சரியில்ல, ஆனால் வாங்குன விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் நல்ல கலெக்ஷன் என்று கூறினார். இப்படி ரஜினிகாந்த் பேசியது, விஜய்யை வெளிப்படையாக விமர்சித்ததை எதிர்த்து விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை கண்டபடி திட்டி இணையத்தில் பேசி வருகிறார்கள்.