புனீத் ராஜ்குமார் விவகாரம்..ரஜினிகாந்திற்கு எழும் கண்டனம்!

death rajinikanth puneeth
By Yathrika Nov 12, 2021 06:09 AM GMT
Report

கன்னட திரையுலக பவர்ஸ்டாராக இருந்து கடந்த மாதம் 29-ந் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்தார் நடிகர் புனீத் ராஜ்குமார்.

அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த செய்தி திரைத்துறை சார்ந்தவர்களையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது. நடிகர்கள் மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்றும் இணையம் வழியும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் சூர்யா சிவகார்த்திகேயன் சரத்குமார் உதயநிதி ஸ்டாலின் போன்றோரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்திருத்தனர்.

இந்நிலையில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் புனீத் ராஜ்குமாரின் மறைவு குறித்து இரங்கல் செய்தி ஒன்றை தன் மகள் சௌந்தர்யா துடங்கியிருக்கும் ஹூட் ஆப்'பில் வெளியிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் ரஜினிற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.