காதல் தோல்வி.. மனைவி லாதாவிற்கு முன் ரஜினி காதலித்த பெண்.. கதறி அழுத சம்பவம்

Rajinikanth Aishwarya Rajinikanth Jailer Soundarya Rajinikanth
By Kathick Aug 05, 2023 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1981ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், லதாவை திருமணம் செய்வதற்கு முன் ரஜினி கண்டெக்டராக இருந்த போது அவருக்கு காதல் வேறொரு பெண்ணுடன் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஜினியின் நண்பரும் பிரபல மலையாள திரையுலகின் இயக்குனர், நடிகருமான ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது " ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்தபோது பேருந்தில் ஒரு பெண்ணை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கினார்கள். இதன்பின், ஒரு நாள் என்னுடைய நாடகம் நடக்கிறது வந்து நாடகத்தை பார் என அந்த பெண்ணை ரஜினிகாந்த் அழைத்தார்.

நாடகத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்த அந்த பெண் ஷாக்காகியுள்ளார். பிலிம் இன்ஸ்ட்யூட் ஒன்றில் ரஜினியை சேரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேருவதற்கு, பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி திகைத்துப்போய் நின்றபோது, அந்த பெண் தான் ரஜினிக்கு பணம் கொடுத்து உதவினார்.

ஆனால், திடீரென ஒரு நாள் அந்த பெண் ரஜினியின் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விட்டார். ரஜினிகாந்த் கதறி அழுதார். நான் வாழ்வதற்கு ஒரே காரணம் அந்த பெண்ணை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக தான் என்று ரஜினி கூறினார்" என இவ்வாறு ஸ்ரீனிவாசன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.