கூலி படத்தில் நடிக்க ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா? இதோ
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ட்ரைலரின் கடைசி ஷாட்டில் ரஜினியின் டீ ஏஜிங் காட்சி ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான கொண்டாடப்பட்டு வருகிறது. கண்டிப்பாக ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கம் தெறிக்க போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நடிகர் ரஜினி இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நட்சத்திரங்களில் ஒருவர். இந்த நிலையில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 150 கோடி சம்பளமாக ரஜினிகாந்த் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.