படம் மீது நம்பிக்கை இல்லை..இனி மகள் பேச்சை கேட்க முடியாது!.. ஆடியோ லாஞ்சில் ரஜினி ஓபன் டாக்

Rajinikanth Jailer Soundarya Rajinikanth
By Dhiviyarajan Aug 08, 2023 07:15 AM GMT
Report

ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நோக்கி மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசைவெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் காலா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசி இருந்த ரஜினிகாந்த், எந்திரன் படத்தை அடுத்து எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்து கொண்டு இருந்தேன்.

மருத்துவர் என்னிடம், உங்களுக்கு பிடித்ததில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார். எனக்கு நடிப்பு தவிர வேறு ஏதும் தெரியாது. அதனால் படங்களில் நடிக்க ஆசை வந்தது. என் மகள் அதிபுத்திசாலி, அவர் என்னிடம்வந்து அனிமேஷன் படத்தில் நடியுங்கள் என்று ஆலோசனை கொடுத்தார்.

அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. படத்தில் தரம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவாகவும் என்று சொன்னார்கள். எனக்கு அந்த படம் மீது வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் எடுத்த வரை போதும் படத்தை அப்படியே திரையரங்குகளில் ரிலீஸ் பண்ணுங்க என சொன்னேன்.

திரைப்படம் வெளியானது, நான் நினைத்த படி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி உடன் பழக கூடாது, அவர்களின் ஆலோசனை கேட்ட கூடாதது என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

பல வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.