54 வயது நடிகைக்கு வலைவீசிய ரஜினிகாந்த்.. ஓகே சொன்ன இயக்குனர்
Rajinikanth
Shobana
By Kathick
ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் படத்திற்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் தலைவர் 171 படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் ரஜினிக்கு ஜோடியாக 54 வயது நடிகை ஷோபா நடிக்க போகிறார் என கூறி தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருவரும் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் நடித்திருந்தனர்.
அதன்பின் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது தான் இணைகிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video