12 வயசுல ரஜினிக்கு அக்கா ரோல்!! கேப்டனுக்கு வில்லியான விஜய் பட நடிகை..
தமிழ் சினிமாவில் தன் அறிமுக படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த நடிகை, பின் விஜய் - அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் நாயகியாகவும், கேப்டன் விஜயகாந்துக்கு வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் தான் அந்த நடிகை.
இந்திரஜா
1993ல் வெளியான ரஜினி, ரோஜா, ராதாரவி, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்த உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக சுஜாதா ரோலில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை இந்திரஜா. இப்படத்தில் ரஜினியை எடுத்து வளர்க்கும் ரோலில் நடித்திருந்தார் இந்திரஜா.
இப்படத்திற்கு பின் புருஷ லட்சணம் என்ற படத்தில் நடித்து பின் தெலுங்கில் ஹீரோயினாக களமிறங்கிய யமலீலா படத்தில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழில் லக்கிமேன், அமைதி படை படத்தில் கஸ்தூரியின் தோழியாக நடித்திருந்தார். 1995ல் ராஜாவின் பார்வையிலே, உழைப்பாளி படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் எந்த காட்சிகளிலும் நடிக்கவில்லை, அதேபோல் அஜித்துடன் இந்திரஜாவுக்கு எந்த காட்சிகளும் இல்லை. பின் 2004ல் எங்கள் அண்ணா படத்தில் கேப்டனுக்கு காதலி மற்றும் வில்லியாக நடித்தார் இந்திரஜா.