அந்த நபருடன் சேர்ந்து தங்க வேண்டாம்... விவாகரத்துக்கு பின் மகளை கூப்பிட்டு எச்சரித்த ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து இருவரும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது ஐஸ்வர்யா, விஷ்ணு விஷால் வைத்து "லால் சலாம்" படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
தங்க வேண்டாம்
ஐஸ்வர்யா பாட்டு பாடுவதில் ஆர்வம் உடையவர் அதனால் லால் சலாம் படத்தில் வரும் சில பாடலை இவரே பாட முடிவு செய்துள்ளார். இவர் ஷூட்டிங் முடிந்தவுடன் அனிருத்தின் ஸ்டூடியோவுக்கு சென்று அங்கேயே தங்கிவிடுகிறாராம்.
இதனால் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவை கூப்பிட்டு அங்கு சென்று தங்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார். ஐஸ்வர்யா அனிருத்தின் நெருங்கிய உறவினர் என்றாலும் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் வந்துவிட கூடாது என்பதற்காக தான் ரஜினிகாந்த் இவ்வாறு கூறினாராம்.