பொண்டாட்டி கிட்ட இதை செய்யுங்க.. பக்கத்தில் மனைவி லதா இருக்கும்போதே, கைதட்டி சிரித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
இயக்குநர்களுக்காக தமிழ் திரையுலகில் D40 என்கிற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் செல்வமணி தனக்கும் தனது மனைவி ரோஜாவிற்கும் இடையான உறவு குறித்து பேசினார்.
இதில் நடிகைகளை திருமணம் செய்தால் விவாகரத்து ஆகிவிடும் என எண்ணி 12 வருடம் கழித்து தான் ரோஜாவை திருமணம் செய்துகொண்டேன். மூன்று நாட்கள் கூட வாழ முடியவில்லை.
அப்போது எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசினார். செல்வமணி நீங்க ஒரு இயக்குனர் நிறைய ஈகோ இருக்கும். எல்லா விஷயத்திலையும் வெற்றி பேரனும்னு நினைப்பீங்க. பொண்டாட்டி கிட்டையும் அப்படி நினைக்காதீங்க. பொண்டாட்டி கிட்ட தோற்று போனால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார். மேடையில் செல்வமணி இது குறித்து பேசியது.
கீழே அமர்ந்திருந்த ரஜினிகாந்த், தன் பக்கத்தில் மனைவி லதா அமர்ந்து இருக்கிறார் என்று கூட பார்க்காமல், கைதட்டி சிரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Thalaivar reaction ??#Thalaivar171 | #Rajinikanth | pic.twitter.com/moqqbgIVn0
— Rajinifans.com (@rajinifans) March 30, 2024