ராஜ்கிரண் தத்தெடுத்த மகளின் உண்மையான அம்மா இவரா? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்..
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராஜ் கிரண், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அவள் என் மகள் இல்லை என்று ராஜ் கிரண் ஓப்பனாக கூறியிருந்தார்.
இந்நிலையில் திருமணமான ஒரு ஆண்டில் தனது காதல் கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார் ஜீனத் பிரியா. ஆனால் முனிஸ் ராஜா, ஜீனத்தை மிரட்டி வருகிறாராம். இதற்கு காரணம் ஜீனத் பிரியாவின் பிறப்பு ரகசியம் தானாம். ராஜ் கிரண் தத்தெடுத்த ஜீனத் பிரியா யார் என்ற உண்மை ரகசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜீனத் பிரியாவின் உண்மையான தாய் லட்சும் பார்வதி என்றும் அவர் ஆந்திராவில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என் டி ராமாராவ்-ஐ 1993ல் லட்சுமி பார்வதி பேராசிரியராக இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய 38 வயது இருக்கும் போது 70 வயதை கடந்த என் டி ராமாராவை திருமணம் செய்திருக்கிறார்.
என் டி ஆரின் முதல் மனைவி பிள்ளைகளுக்கு லட்சுமியை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் தன் குழந்தையை பாதுக்காப்பாக வளர்க்க முடியாது என்ற பயம் வந்துள்ளது. அதனால் சினிமாவில் தன் நட்பாக இருந்த நடிகர் ராஜ் கிரணுக்கு தன் மகளை வளர்ப்பு மகளாக்கியிருக்கிறார் லட்சுமி பார்வதி. இந்த ரகசியத்தை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி தான் முனிஷ் ராஜா மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்த உண்மையை ஜீனத் பிரியா, வெளியில் வந்தால் தான் என்ன நடந்தது என்று தெரியவரும்.