உதடு வீங்க காரணம் கோபியா? சீரியல் நடிகை ரேஷ்மாவை வெச்சு செய்த பிக்பாஸ் ராஜு..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Jul 28, 2022 05:00 PM GMT
Report

மக்கள் மத்தியில் தற்போது விறுவிறுப்பை காண்பித்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பிரபல தொலைக்காட்சியில் இல்லத்தரசிகள் படும் கஷ்டங்களை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

மனைவி பாக்யலட்சுமியை விட்டுவிட்டு காதலித்த பெண் ராதிகாவுடன் கள்ளத்தொடர்பில் இத்தனை நாட்களாக கோபி இருந்து வருகிறார். குடும்பத்திற்கு தெரியாமல் கோபி தப்பித்த காட்சியாக இதுவரை சென்ற நிலையில் கடசியில் அனைவருக்கும் உண்மை தெரிந்து பெரிய பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் ராதிகாவாக நடித்து வரும் பிக்பாஸ் நடிகை ரேஷ்மா, சமீபத்தில் நடந்த ராஜு விட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ராஜு, ரேஷ்மா பற்றிய ரசிகர்களின் மீம் புகைப்படங்களை படித்து காமிக்கிறார்.

அதில், ராதிகா ஓவரா லிப்ஸ்டிக் போட்டு உதடு வீங்கிவிட்டதா என்று கேட்க, அதற்கு கோபி எதாவது பண்ணாரா ரேஷ்மா என்று ராஜு கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.