பொது இடத்தில் போட்டு வந்த ஆடையால் சங்கடப்பட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. வைரலாகும் வீடியோ..

Rakul Preet Singh Akshay Kumar
By Edward Sep 24, 2022 08:53 AM GMT
Report

கன்னட சினிமாவில் கில்லி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழில் யுவன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதன்பின் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழில் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகளாக காணாமல் போனார். அதன்பின் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என் ஜி கே, உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் ஓவர் கிளாமர் காட்டி நடித்து இந்தி பக்கம் திரும்பி பாலிவுட் நடிகையாக வளம் வருகிறார். சமீபத்தில் ராட்சசன் படத்தின் இந்தி ரீமெக்கான Cuttputlli என்ற படத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் பிரஸ் மீட் ஒன்றில் குட்டையான ஆடையணிந்து வந்துள்ளார். மேடையில் உட்காருவதில் சங்கடப்பட்டுள்ளார். குட்டையான ஆடையணிந்ததால் அவர் சங்கடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.