தமிழில் வாய்ப்பில்லாமல் போன நடிகை ரகுல் ப்ரீத் சிங்-கின் சொத்து மதிப்பு இவ்வளவா? கோடியில் சம்பளமாச்சே..
கன்னட சினிமாவில் கில்லி என்ற படத்தில் 2009ல் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 19 வயதில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தமிழில் யுவன் என்ற சிறு பட்ஜெட் படம் மூலம் அறிமுகமாகினார்.
தெலுங்கு சினிமா
அதன்பின் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ பொன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, தேவ் போன்ற படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ரகுல் ப்ரீத் இந்தி பக்கம் சென்று அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார். அவர் நடிப்பில் தமிழ் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இந்தியன் 2 படத்தில் மட்டும் கமிட்டாகி இருக்கிறார்.

சொத்து மதிப்பு
இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்காக தற்போது 2 கோடி வரை சம்பளமாக பெரும் ரகுல் ப்ரீத் சிங் சுமார் 45 கோடி அளவில் சொத்து மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள், பிராண்ட் விளம்பரங்கள், உயரக வாகனங்கள் என்று அதில் நடித்து காசும் சம்பாதித்து வருகிறார். மேலும், ஹைதராபாத், மும்பை என்று சொந்தமாக வீடுனையும் வைத்திருக்கிறார்.
ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் எஃப்45 செயல்பாட்டு பயிற்சி வசதிகளையும் ஜிம் வணிகத்தையும் வைத்திருக்கிறார் ரகுல் பிரித் சிங். ஆட்டோ மொபைல்களை ஓட்ட ஆர்வம் கொண்ட ரகுல் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்ஜி உள்ளிட்ட கலெக்ஷன்களை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ஸ் உள்ளிட்ட 75 லட்சம் மதிப்புள்ள கார்களும் வைத்துள்ளார்.
