நளினி - ராமராஜன் விவாகரத்து காரணம் இதுதான்!! உண்மையை உடைத்த நடிகை நளினி

Ramarajan Tamil Actress
By Edward Jul 08, 2023 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் ராணுவ வீரன். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை நளினி. அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.

அதன்பின் நடிகர் ராமராஜனுடன் ஜோடியாக நடித்த நளினி அவரை காதலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அருணா, அருண் என்ற இரு பிள்ளை இருக்கும் நளினி, ராமராஜனுடன் இன்னும் நட்புடன் வாழ்ந்தும் பிள்ளைகளை இருவரும் சேர்ந்து கவனித்தும் வருகிறார்கள்.

நளினி - ராமராஜன் விவாகரத்து காரணம் இதுதான்!! உண்மையை உடைத்த நடிகை நளினி | Ralini Open Divorce With Ramarajan Reason Mine

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் திருமணம் முதல் விவாகரத்து வரை என்ன ஆனது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், சினிமாவில் நடிக்க அப்பா சினிமாவை பற்றி தெரிந்ததால் தான் என்னை நடிக்க வேண்டாம்ன்னு சொன்னார் என்றும் ராம நாராயணன் படங்களில் நடித்த போது தான் ராமராஜன் காதலித்து வந்தார். அது எனக்கு அப்போது தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராமராஜன் பிஸியாக நடித்த போது ஒரு வருடம் நளினி மீது கேமெரா படாதுன்னு ஒரு ஜோசியர் சொன்னதாகவும் அவர்(ராமராஜன்) தன்னம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. இது இல்லன்னா அது இல்லாட்டி இதுன்னு ஓவர் கான்பிடெண்ட், அவரும் ஜோசியம் பார்ப்பார். என்னையும் அவரையும் பிரித்தது ஜோசியம் தானா? திருமணத்திற்கு முன்னாடி ஜோசியம் பார்க்கவில்லை ராமராஜன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நளினி, அப்போது பார்த்த போது கூட சொல்லுவாரு, உன்ன கல்யாணம் பண்ண பிறகு தான் நான் நல்லா இருந்த, கல்யாணத்துக்கு எம்ஜிஆர் வருவாருன்னு ஒரே காரணத்துக்காக தான் கல்யாணம் செஞ்சேன்னு சொல்லுவாரு என நளினி கூறியுள்ளார்.